search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க. ஸ்டாலின்"

    • சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
    • கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

    தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கதிர் ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • இவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     

    கமல் - மு.க. ஸ்டாலின்

    கமல் - மு.க. ஸ்டாலின்

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று கோவை செல்கிறார். வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று கோவை செல்கிறார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்கிகளில் பங்கேற்கிறார்.

    அப்போது பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். விழா மேடையில் பேசிய அஸ்வினி, தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். விழா முடிந்ததும் அஸ்வினி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.

    நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த செய்திகளை படத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின் டுவிட்டர் செய்தியை ரீ-டுவீட் செய்துள்ள நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது…

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின்

    மேலும் எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊதியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊதிய வழங்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்திய நிலுவைத் தொகையை விடுவிக்காததால் 1,178 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கப்படாததால் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

    பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
    ×